உலக செய்திகள்

ரேகம் கான் சொல்லும் ‘ஐந்து குழந்தைகள்’ ரகசியம் + "||" + Regum Khan says five kids secret

ரேகம் கான் சொல்லும் ‘ஐந்து குழந்தைகள்’ ரகசியம்

ரேகம் கான் சொல்லும் ‘ஐந்து குழந்தைகள்’ ரகசியம்
புதிதாக பாகிஸ்தான் பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிற இம்ரான் கானுக்கு பல தலைவலிகள். அவற்றில், அவரது முன்னாள் மனைவி ரேகம் கானும் ஒருவர்.
முன்னாள் பி.பி.சி. ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ரேகம் கான், தனது முன்னாள் கணவர் மீது பல குண்டுகளை வீசிக் கொண்டேயிருக்கிறார்.

அதில் ஒன்று, “ஓர் அரசியல்வாதியின் மனைவியாக கிடைக்கும் சுகங்களை மட்டும் அனுபவி, மற்ற விஷயங்களில் நீ தலையிட வேண்டாம்” என்று இம்ரான் சொன்னதாக ரேகம் கான் கூறியிருப்பது.


ஓர் ஊடகவியலாளராக, பாகிஸ்தானில் நிலவும் ஊழல் போன்ற பிரச்சினைகளில் தலையிட வேண் டாம் என்று அவர் கூறினார் என்கிறார் ரேகம். அத்துடன் தன்னை ஒரு பெரும் தலைவராக போற்றிப் புகழ வேண்டும் என்றும் இம்ரான் எதிர்பார்த்தார் எனச் சொல்கிறார் இந்த அதிரடிப் பெண்.

“பாகிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து ஓர் பத்திரிகையாளராக நான் சேகரித்த விஷயங் களை வெளிப்படுத்த வேண்டாம் என்று இம்ரான் கூறினார். அவர் பழகிப்போயிருந்த ஆடம்ப வாழ்க்கையை நானும் அனுபவித்தால் போதும் என்று அவர் நினைத்தார். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் செல்லும் இடங்களில் எல்லாம் ஊழல், லஞ்சம் குறித்த ஆதாரங்களை மக்கள் என்னிடம் கொண்டு வந்து கொட்டுவார்கள். நான் அதுகுறித்து இம்ரானின் கவனத்துக்குக் கொண்டு சென்றால் அவர் அதைப் புறக்கணிப்பார். ஆனால் அது குறித்து பொதுவெளியில் பொங்குவார்” என்று பொரிகிறார் ரேகம்.

இம்ரான் மீது தனக்கு மிகுந்த பாசம் இருந்தது, அதனால்தான் இருவருக்கும் அடிப்படையான கொள்கை வேறுபாடுகள் ஏற்பட்டபோதும் தான் அவரை விட்டு உடனடியாகப் பிரியவில்லை என்று ரேகம் சொல்கிறார்.

இம்ரானின் கட்சி அதிகாரத்தில் இருந்த கைபர் பக்துன்கவா பிராந்தியத்தில் முறையான நிர்வாகம் செய்யாமல் இம்ரான் தவிர்த்ததை தன்னால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை என ரேகம் சொல்கிறார்.

தன்னுடைய மனைவி, எப்போதும் புன்னகையுடன் தன்னோடு உலா வர வேண்டும், நட்சத்திர ஓட்டல்களில் தங்க வேண்டும், சொந்த விமானத்தில் பறக்க வேண்டும், தங்கள் பெரும் மாளிகையில் ஓர் அலங்காரப் பொம்மை போல இருக்க வேண்டும் என்பதே இம்ரானின் எண்ணம் என்கிறார் ரேகம்.சீதா ஒயிட் என்ற பெண் மூலம் பெற்ற குழந்தையான டைரியான் ஒயிட் பற்றி இம்ரான்கானிடம் ஒருமுறை கேட்டதாகவும், அப்போது அவர் தனக்கு முறைதவறிப் பிறந்த குழந்தை டைரியான் மட்டுமல்ல, “தனக்குத் தெரிந்து” ஐந்து குழந்தைகள் இருக்கின்றன என்று கூறினாராம்.

தனது முன்னாள் மனைவி ஜெமிமாவை மணந்தது பற்றியும் இம்ரான் வருத்தம் தெரிவித்தாராம்.

‘உனக்குத் தெரியுமா? எங்கள் திருமண வரவேற்பு நாள் இரவில் நான் கண்ணீர்விட்டு அழுதேன். அன்றைய வரவேற்பில் ஜெமிமா குடித்துக் குடித்து மட்டையாகி விட்டாள். அது பற்றி நினைத்து நினைத்து அழுதபடியே நான் தூங்கிவிட்டேன்’ என்றார் எனக் கூறுகிறார் ரேகம்.

இவ்வாறு விவரித்துக் கொண்டே போகும் அவர், நூலில் இம்ரான் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் மேலும் சில விஷயங்கள் இங்கே விவரிக்க முடியாதவை.

“இம்ரானின் கட்சி அளவிலேயே நிலவிய ஏராள தாராள ஊழல், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் கொள்கையிலேயே ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் குறித்து நான் அவருடன் வாதிட ஆரம்பித்தேன். அப்போதுதான் எங்களுக்கு இடையில் பிளவு ஏற்படத் தொடங்கியது. அவரும் இனிமேல் ஒரு மனைவி தேவையில்லை என நினைத்தார், என்னை ஒரு பலியாடு போல பயன்படுத்த ஆரம்பித்தார்” என்று கூறும் ரேகம், மேலும் சில கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்...

உங்களின் புதிய சுயசரிதையில் இம்ரான் கான் பற்றி அதிரடியான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருப்பதாகக் கூறுகிறார்களே...?

‘‘வாழ்க்கை தனக்கு என்ன அதிரடியான திருப்பங்களைத் தரப் போகிறது என்று அறியாத, அப்படி எதிர்பாராத திருப்பங்கள் நேர்ந்தபோதும் அவற்றை புன்னகையுடன் எதிர்கொண்ட, ஓர் அமைதியான பெண்ணைப் பற்றிய புத்தகம் இது. பலரும் பேச விரும்பாத, குடும்ப வன்முறை, ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவை குறித்தும் இதில் நான் பேசுகிறேன்.’’

பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஒருவர், எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் புத்தகம் போல இது தோன்றுகிறது. இன்று இம்ரான் கான் குறித்து உங்களின் கருத்து என்ன?

‘‘நான் பழிவாங்கும் நபரல்ல. எங்கள் பிரிவு, தனிப்பட்ட பிரச் சினையால் ஏற்பட்டது அல்ல. நான் அவருடைய மனைவி யாக இருந்தபோது, ஓர் அரசி யல்வாதியாக அவர் நடித்த விதமும், ஊழல் பேர்வழிகளை வளர்த்துவிட்ட விதமும்தான் எனக்குப் பிடிக்க வில்லை. அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.’’

இம்ரான்கானின் தேர்தல் வெற்றியை, உலகளவில் தற்போது ஏற்பட்டுவரும், கவர்ச்சிகரமான, ஈர்க்கும் தலைவர்கள் மீதான மக்கள் நாட்டத்தின் வெற்றியாகக் கருதுகிறீர்களா?

‘‘இதை நமது சமுதாயத்தின் பிரதிபலிப்பாகத்தான் நான் பார்க்கிறேன். இம்ரானைப் போல கவர்ச்சிகரமான பல தலைவர்கள் வெற்றி பெற்றதில்லையே? காரணம், அவர்கள் உரத்துப் பேசாதவர் களாக, பெண்களை மயக்குபவர்களாக இல்லாமல் இருக்க லாம். இம்ரான் போன்ற ஆட்களை அவர்களுக்குப் பின்னால் இருந்து சில பேர் முன்னிறுத் துகிறார்கள்.’’

ஒரு காலத்தில் உங்களை, ‘பி.பி.சி. வானிலை அறிவிப்பாளர்’ என்று திரும்பத் திரும்ப குறிப்பிட்டார்களே? அப்படி உங்களை மட்டம் தட்டியது வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறதா? ‘‘இதுபோன்ற வர்ணனைகள், சிலரின் பயங்களில் இருந்துதான் எழுகின்றன. கோட், சூட் அணிந்த ஆண்களுக்குப் பதிலாக, நட்பான முகபாவம் கொண்ட பெண்கள் வானிலை அறிவிப்பாளர்களாக இடம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் அப்பணியை சிறப்பாகவும் செய்கிறார்கள். தங்கள் வேலைகளைசிறப்பாக செய்யும் பெண்களுடன் ஆண்களால் போட்டியிட முடியாதபோது, அவர்களை வேறு விதமாக அசிங்கப்படுத்தத் தொடங்குகிறார்கள்’’ என்று அதிரடியாக சொல்கிறார், ரேகம்கான்.