‘மங்குட்’ புயல், சீனாவுக்கு விரைந்தது


‘மங்குட்’ புயல், சீனாவுக்கு விரைந்தது
x
தினத்தந்தி 16 Sep 2018 11:15 PM GMT (Updated: 16 Sep 2018 8:38 PM GMT)

பிலிப்பைன்சை உருக்குலைய வைத்து விட்டு, இந்தப் புயல் சீனாவை நோக்கி நேற்று விரைந்தது.

மணிலா,

நடப்பு ஆண்டின் வலுவான புயல் என்று சொல்லப்படுகிற ‘மங்குட்’ புயல், பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவை முற்றிலுமாய் புரட்டி போட்டு விட்டது.

இந்தப் புயலாலும், மழையாலும், நிலச்சரிவாலும் நேரிட்ட சம்பவங்களில் 29 பேர் உயிரிழந்து உள்ளனர். சுமார் 15 பேர் காணாமல் போய் உள்ளனர்.

விவசாய பயிர்கள் பெருமளவு சேதம் அடைந்து உள்ளன. நிறைய சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தகவல் தொடர்பு வசதிகள் முடங்கின. மின்வினியோகம் தடைப்பட்டு உள்ளது. கட்டிடங் கள் பெரும் சேதம் அடைந்து இருக்கின்றன. ஏறத்தாழ 50 லட்சம் மக்கள் இந்தப் புயலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

லுசான் தீவை உருக்குலைய வைத்து விட்டு, இந்தப் புயல் சீனாவை நோக்கி நேற்று விரைந்தது. மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. புயலால் ஹாங்காங்கில் பலத்த மழை பெய்தது. ஏற்கனவே புயல் எதிர்பார்ப்பினால் ஹாங்காங், சீனா ஆகிய இரு நாடுகளும் மக்களுக்கு எச்சரிக்கைகள் விடுத்து உள்ளன.

சீனாவில் 7 நகரங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஷென்ஜென் விமான நிலையம் மூடப்பட்டது. குவாங்சோவில் விமான சேவைகள் இன்று வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஹைனான் மாகாணத்தில் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

சீனாவின் குவாங்ஸி பிராந்தியத்தில் புயலால் இன்று பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

Next Story