உலக செய்திகள்

பேஷன் ஷோவில் நடைபோட்ட கர்ப்பிணி மாடலுக்கு குழந்தை பிறந்தது + "||" + Model goes into labour minutes after walking in Rihanna's NYFW show

பேஷன் ஷோவில் நடைபோட்ட கர்ப்பிணி மாடலுக்கு குழந்தை பிறந்தது

பேஷன் ஷோவில் நடைபோட்ட கர்ப்பிணி மாடலுக்கு குழந்தை பிறந்தது
உள்ளாடை பேஷன் ஷோவில் நடைபோட்ட கர்ப்பிணி மாடலுக்கு சற்று நேரத்தில் குழந்தை பிறந்தது
நியூயார்க்:

 பேஷன் ஷோவில் நடைபோட்ட மாடல், உடனடியாக பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஸ்லிக் வுட்ஸ், அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி மாடலான இவர், சைமன் தாம்சன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சமீபத்தில் நியூயார்க் பேஷன் வீக்கில் ரிஹான்னா சாவேஜ் எக்ஸ் பெண்டி  உள்ளாடை ஷோவில் கலந்து கொண்டார்.


இதற்காக கருப்பு நிற  உள் ஆடையை அணிந்து கொண்டு, பேஷன் ஷோவில் ஒய்யார நடை நடந்தார். இது நியூயார்க் பேஷன் வீக்கின் நிறைவு நிகழ்ச்சியாக புரோக்கிலினில் நடைபெற்றது.

22 வயதன சைமன் தாம்சன், பேஷன் ஷோவில் கலந்து கொண்ட போது பிரசவ வலி ஏற்பட்டது .  நேராக பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தைக்கு சபிர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சைமனின் கணவர் அடோனிஸ் போஸ்ஸோவும் மாடலாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மார்க் ஜேகப்ஸ் என்ற பேஷன் டிசைனர் மூலம் சைமன் தாம்சன் பிரபலமடைந்தார்.