போதை மருந்து கொடுத்து 1000 பெண்கள் பாலியல் வன்கொடுமை டாக்டர் காதலியுடன் கைது


போதை மருந்து கொடுத்து 1000 பெண்கள் பாலியல் வன்கொடுமை டாக்டர்  காதலியுடன் கைது
x
தினத்தந்தி 19 Sep 2018 7:13 AM GMT (Updated: 19 Sep 2018 7:13 AM GMT)

அமெரிக்காவில் போதை மருந்து கொடுத்து 1000 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த எலும்பு முறிவு டாக்டர் காதலியுடன் கைது செய்யப்பட்டார்.

லாஸ்ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிராண்ட் வில்லியம் ரோபிக்யக்ஸ்  (38). எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் அமெரிக்காவின் டெலிவிஷன் ரியாலிட்டி ஷோவிலும் பெங்கு பெற்று உள்ளார். இவரது காதலி செரிசா லாரா ரிலே (31).

இவர்கள் இருவரும் மதுப்பிரியர்கள். பார்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். அங்கு வரும் அழகிய பெண்களை பேச்சின் மூலம் வசியம் செய்து அவர்களுடன் ரோபிசியஸ் நட்புறவை ஏற்படுத்துவார். பின்னர் அவர்களுக்கு கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை வழங்கி கற்பழித்து வந்தார்.

இதற்கு அவரது காதலி ரிலே உடந்தையாக இருந்தார். இந்தநிலையில் அவரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் போலீசில் புகார் செய்தனர். அதில் ரோபிசியஸ் தங்களை விருந்துக்கு அழைத்து போதைபொருள் வழங்கியதாகவும், நியூபோர்ட் பீச்சில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்ததாகவும் புகார் செய்தனர்.

எனவே, ரோபிசியசையும், அவரது காதலி ரிலேவையும் ஆரஞ்கவுண்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் ரோபிசியஸ் செல்போனை சோதனை செய்தபோது 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இருந்தன. விசாரணையில் இவர்களால் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது...

ரோபிசியசால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் செய்யலாம். அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவித்தனர். அதையடுத்து அவர் போதை மருந்து கொடுத்து கற்பழித்ததாக 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் கொடுத்து உள்ளனர்.

வீடியோக்களில் பெண்கள் அதிக அளவில் போதை மயக்கத்தில் உள்ளனர் அல்லது எதிர்த்து நிற்கும் திறன் அற்றவர்களாக உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரோபியசியசுக்கு 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும். அவரது காதலி ரிலேவுக்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளர்.

Next Story