உலக செய்திகள்

மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு + "||" + 21 dead from bootleg liquor in Malaysia

மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழப்பு
மலேசியாவில் விஷ சாராயம் அருந்திய 21 பேர் உயிரிழந்துள்ளனர், இதுதொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.

கோலாலம்பூர், 


மலேசியாவில் மதுபானங்கள் மீது கூடுதல் வரி காரணமாக வீடுகளில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் பிரபலமாக உள்ளது. இதனை ஆசிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறி உள்ள தொழிலாளர்கள் குடிக்கின்றனர். இப்படி அங்கு தலைநகர் கோலாலம்பூரிலும், செலங்கோர் மாகாணத்திலும் உள்நாட்டு சாராயம் குடித்தவர்களில் 57 பேர் மயங்கி சரிந்தனர். மெத்தனால் கொண்டு தயாரிக்கப்படுகிற இந்த சாராயத்தில் வி‌ஷத்தன்மை கலந்து இருந்ததை அறியாமல் அவர்கள் குடித்து உள்ளனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. உள்நாட்டு சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் மலேசியர்கள் மற்றவர்கள் வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சோதனைகளை நடத்தியுள்ள அந்நாட்டு போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செருப்பில் மறைத்து ரூ.10 லட்சம் தங்கம் கடத்தல் வாலிபரிடம் விசாரணை
மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செருப்பில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.
2. மலேசியா மாரியம்மன் கோவிலில் பயங்கர தாக்குதல், 21 பேர் கைது; விசாரணைக்கு வலியுறுத்தல்
மலேசியாவில் உள்ள மாரியம்மன் கோவிலில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு
ஆதார் திட்டத்தால் ஈர்க்கப்பட்ட மலேசிய அரசு தங்கள் நாட்டிலும் இதுபோன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
4. ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது
ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்.
5. உலகைச்சுற்றி...
மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.