கட்சி தலைவர் தேர்தலில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெற்றி


கட்சி தலைவர் தேர்தலில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெற்றி
x
தினத்தந்தி 20 Sep 2018 7:53 AM GMT (Updated: 20 Sep 2018 7:53 AM GMT)

கட்சி தலைவர் தேர்தலில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வெற்றி பெற்றுள்ளார்.

டோக்கியோ,

ஜப்பான் பிரதமர் ஷின்சா அபே ஆளும் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.முற்போக்கு ஜனநாயக கட்சி யின் (எல்டிபி) தலைவரான ஷின்சோ அபே, கடந்த 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில், எல்டிபி கட்சித் தலைவர் தேர்தலில் அபே போட்டியிட்டார்.

இதில் வியாழக்கிழமை நடத்த தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஷிங்கெரு இஷிபாவை தோற்கடித்து 3-வது முறையாக தலைவர் பதவிக்கு  ஷின்சே அபே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 553 வாக்குகள் பெற்று ஷின்சோ அபே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷிங்கெரு இஷிபா 254 வாக்குகள் மட்டுமே பெற்றார். 

 இதனைத் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அவர் கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பார். இதன்மூலம் நீண்டகாலம் கட்சித் தலைவராக பதவி வகித்தவர் என்ற பெருமை அபேவுக்கு கிடைத்திருக்கிறது.

Next Story