கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது


கம்ப்யூட்டரில் கோளாறு: கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை முழுவதுமாக நிறுத்தியது
x
தினத்தந்தி 20 Sep 2018 12:12 PM GMT (Updated: 20 Sep 2018 12:12 PM GMT)

முக்கியமான கம்ப்யூட்டரில் மர்மாமான கோளாறு கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை தற்போது முழுவதுமாக நிறுத்தி உள்ளது.


பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.கடந்த 5 வருடங்களாக, செவ்வாய் கிரக மாதிரிகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பூமிக்கு அனுப்பி உள்ளது. 

2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, புளோரிடாவில் உள்ள அமெரிக்க விமானப்படை நிலையமான கேப் கானேவாரில் இருந்து செவ்வாய் கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பப்பட்டது. இதுவரை கியூரியாசிட்டி  350 மில்லியன் மைல் (560 மில்லியன் கி.மீ) பயணம் மேற்கொண்டு செவ்வாயில் இறங்கி உள்ளது. ஆகஸ்ட் 6, 2012 அன்று ஒரு வெற்றிகரமாக செவ்வாயில்  தரையிறங்கிய பிறகு, 11 மைல் (18 கிமீ) தூரத்தை சுற்றிப் பயணம் செய்து உள்ளது.  இது செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தா (MSL)  தொடங்கப்பட்டது
மற்றும் ரோவர் மொத்த பணியில் 23 சதவீதம் முடித்துள்ளது.

முக்கியமான கம்ப்யூட்டரில்  மர்மமான கோளாறு  கியூரியாசிட்டி விண்கலம் தனது ஆராய்ச்சிகளை தற்போது முழுவதுமாக நிறுத்தி உள்ளது.  ரோவரின் முக்கியமான கம்ப்யூட்டரில்  மர்மமான கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதனால் அது  செவ்வாயில்  கண்டறிந்த தகவல்களை பூமிக்கு அனுப்புவதை நிறுத்தி உள்ளது.

விஞ்ஞானிகள், 'சில நேரம்' பொறியியலாளர்கள் சிக்கலைக் கண்டறிந்து சரிசெய்யலாம் என கூறி உள்ளனர். கியூரியாசிட்டி  14 மில்லியன் சதுர மைல்கள் பரப்பு கொண்ட மிகப்பெரிய மார்டியன் தூசி புயல்களில் ஒன்றை பதிவுசெய்து உள்ளது.

முக்கிய கணினியில் உள்ள  மர்மமான சிக்கலைக் கண்டறிய தனி அமைப்பு குறித்து இந்த திட்டத்தின் உறுப்பினர்கள்  ஆய்வு செய்து வருகிறார்கள். நாசா அதன் சூரிய சக்தியை 3 மாதம் நிறுத்திவைக்க உள்ளது. விண்கலத்தின் கம்யூட்டரில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது இது முதல் முறை அல்ல. விண்கலம் கடைசியாக செப்டம்பர் 7 ந்தேதி ஒரு செல்பி எடுத்து அனுப்பி இருந்தது. அதில் இந்த கோடையில்  புயலின் விளைவாக செவ்வாயை மூடியிருக்கும் பெரும் புழுதி படலம் தெரிகிறது .

Next Story