உலக செய்திகள்

வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை : அமெரிக்க மந்திரி அறிவிப்பு + "||" + Talk again with North Korea: US ministerial declaration

வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை : அமெரிக்க மந்திரி அறிவிப்பு

வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை : அமெரிக்க மந்திரி அறிவிப்பு
அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அறிவித்தார்.

வாஷிங்டன்,

அணுகுண்டுகளை வெடித்தும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்தும் வந்த வடகொரியா, அணு ஆயுதங்களை முழுமையாக கை விட இப்போது சம்மதித்து உள்ளது.

இது தொடர்பாக தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவரான கிம் ஜாங் அன்னுடன் 3–வது சுற்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது வடகொரியாவின் முக்கிய ஏவுகணை என்ஜின் சோதனை தளமான டாங்சாங் ரி தளத்தை நிரந்தரமாக மூடி விடுவதற்கு கிம் ஜாங் அன் சம்மதித்தார். அமெரிக்காவும் பரஸ்பர நடவடிக்கை எடுத்தால், யாங்பியான் அணு ஆயுத தளத்தை மூடி விடவும் தயார் என கிம் ஜாங் அன் கூறி உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என வாஷிங்டனில் அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘வடகொரியா வெளியுறவு மந்திரியை பேச்சு வார்த்தை நடத்த அடுத்த வாரம் நியூயார்க் வருமாறு அழைப்பு விடுத்து உள்ளேன். எங்கள் நோக்கம், 2021–ம் ஆண்டு ஜனவரிக்குள் அணு ஆயுதங்களை வடகொரியா முழுமையாக கைவிட்டு விட வேண்டும் என்பதுதான்’’ என குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, ‘‘வியன்னாவில் வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஸ்டீபன் பீகன்னை சந்திப்பதற்கு வடகொரியா பிரதிநிதிகள் விரைவில் வருமாறும் அழைப்பு விடுத்து உள்ளேன்’’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே பியாங்யாங்கில் வடகொரியாவும், தென்கொரியாவும் ஒப்பந்தம் செய்து கொண்டதை சீனா வரவேற்று உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்கா மீது வெனிசூலா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு ‘என்னை கொலை செய்ய சதி செய்கிறது’
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசூலாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 2014–ம் ஆண்டு முதல் சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
2. அமெரிக்க நாட்டில் யூத வழிபாட்டு தலம் மீது தாக்குதல் நடத்த சதி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் கைது
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணம், டோலிடோ நகரத்தில் அமைந்துள்ள யூத வழிபாட்டு தலம் ஒன்றில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் சதி செய்துள்ளனர்.
3. அமெரிக்க கார்களுக்கான வரியை குறைக்க சீனா சம்மதம்: டிரம்ப் தகவல்
அமெரிக்க கார்களுக்கான வரியை குறைக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. இந்திய-அமெரிக்க விமானப்படை 12 நாட்கள் கூட்டு பயிற்சி: மேற்கு வங்காளத்தில் இன்று தொடங்குகிறது
இந்திய-அமெரிக்க விமானப்படைகளுக்கு இடையேயான 12 நாட்கள் கூட்டு பயிற்சி மேற்கு வங்காளத்தில் இன்று தொடங்குகிறது
5. ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - பொருளாதார குற்றவாளிகளை பிடிக்க 9 அம்ச திட்டம்
‘ஜி-20’ உச்சி மாநாட்டில், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். தப்பி ஓடுகிற பொருளாதார குற்றவாளிகளை பிடிப்பது தொடர்பாக அவர் 9 அம்ச திட்டம் ஒன்றை தாக்கல் செய்தார்.