ரஷ்யாவிடம் போர் விமானங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு


ரஷ்யாவிடம் போர் விமானங்கள் வாங்கிய  சீனா மீது அமெரிக்கா தடை விதிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2018 7:31 AM GMT (Updated: 21 Sep 2018 7:31 AM GMT)

ரஷ்யாவிடம் போர் விமானங்கள் வாங்கிய சீனா மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்,

உக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க அரசியலில் அதன் தலையீடு இருந்ததாக கூறப்படுவது ஆகியவை தொடர்பாக ரஷ்யா மீது அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த நிலையில், ரஷ்யாவிடன் போர் தளவாடங்கள் வாங்கிய சீனாவுக்கு எதிராகவும் அமெரிக்கா நிதி தடையை விதித்துள்ளது. 

அண்மையில் 10 ரஷ்ய சுகோய் Su-35 வகை போர் விமானங்களையும், S-400 வகை ஏவுகணைகளையும் சீனா  ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது. 
இதையடுத்து, சீனா மீது CAATSA -சட்டத்தின் கீழ் தடை விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா விதித்துள்ள தடையால் தங்களின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் விற்பனையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

Next Story