உலக செய்திகள்

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஒருவாரத்திற்கு முன் பிறந்துள்ளார் டைம் டிராவலர் கணிப்பு? + "||" + Fake News? Time traveler claims future US president was born a week ago, but where?

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஒருவாரத்திற்கு முன் பிறந்துள்ளார் டைம் டிராவலர் கணிப்பு?

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஒருவாரத்திற்கு முன் பிறந்துள்ளார்  டைம் டிராவலர் கணிப்பு?
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ஒருவாரத்திற்கு முன் பிறந்துள்ளார் என அடையாளம் தெரியாத டைம் டிராவலர் ஒருவர் தகவல் வெளியிட்டு உள்ளதாக 'அபெக்ஸ் டி.வி' யூடியூபில் வீடியோ வெளியிட்டு உள்ளது.
YouTube சேனலில்  'அபெக்ஸ் டி.வி' மீண்டும் ஒரு வீடியோவை பதிவேற்றி  உள்ளது.  அதில் டைம் டிராவலர் என அறிவித்த ஒருவரின் வீடியோ இடம் பெற்று உள்ளது.  அதில் அந்த டைம் டிராவலர்  வருங்கால அமெரிக்க அரசியலைப் பற்றி அதிர்ச்சியூட்டும் கணிப்புகளை வெளீயிட்டு உள்ளார்.

அனாமதேய மனிதன், அந்த வீடியோவில்   தற்போது 4932 ஆம் ஆண்டு  அடைந்துவிட்டதாகக் கூறி உள்ளார். அமெரிக்காவின் 56 வது ஜனாதிபதி செப்டம்பர் 12, 2018 இல் பிறந்தார் என்று கூறி உள்ளார். எதிர்கால அமெரிக்க ஜனாதிபதி ஜானு ஆலிவர் பெக் என பெயரிடப்பட்டிருப்பதாக அந்த டைம் டிராவலர் கூறி உள்ளார்.

அந்த வீடியோவில், 2082 ஆம் ஆண்டு நவம்பர் 03 அன்று, அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜானு ஆலிவர் பெக் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று நேரத்தை பயணித்தவர் வாதிட்ட்டு உள்ளார்.

மேலும் டைம் டிராவலர் 2084 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி படுகொலை செய்யப்படுவார் என தெரிவித்து உள்ளார்.மேலும்  ஜனாதிபதி பெக் அனைத்து காலத்திற்குமான மிகப்பெரிய தத்துவவாதிகளில் ஒருவராக இருப்பார் என்றும், அரசியல் வித்தியாசங்களைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் அவர் பரவலாக மதிக்கப்படுவார் என்றும் கூறி உள்ளார்.

இந்த வீடியோவை 'அபெக்ஸ் டி.வி' சமீபத்தில்  பதிவேற்றி உள்ளது. அது தற்போது வைரலாகி உள்ளது. டைம் டிராவலர்  கணிப்புகளை ஆதரிப்பதற்கு YouTube சேனல் எந்தவொரு உறுதியான ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றாலும், அநேக பார்வையாளர்கள் அனாமதேய மனிதனின் முன்னறிவிப்புகளைப்  நம்புகிறார்கள்.

லென்டா ஜெனிஃபர் என்ற ஒரு YouTube பயனர்  ஜானு ஆலிவர் என்ற பெயரில் குழந்தை செப்டம்பர் 12 அன்று தனது மருத்துவமனையில் பிறந்தார், ஆனால் எங்கே ?. என கூறவில்லை.குழந்தை பிறந்தது ஒரு ஜோக் இல்லை. அது உண்மைதான்.

இந்தச் சேனலை நான் நம்புவதற்கு முன்பே , இப்போது அந்த குழந்தை அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டது "என கூறி உள்ளார். மற்றொரு கருத்தில், லிண்டாவும் கென்யாவில் குழந்தை பிறந்தது என்று குறிப்பிட்டார்.

இது முதன்முறையாக அபெக்ஸ் தொலைக்காட்சி டைம் டிராவலரின்  நம்பமுடியாத வீடியோக்கள் பதிவேற்றம் செய்யவில்லை.  சமீபத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில், மற்றொருமுறை பயணித்தவர், உலகப் போர் 3 இந்த ஆண்டு நடக்கும் என்று கூறினார்.  இந்த இரத்தம் சிந்துவதற்குப் பிறகு வாழும் பூமியானது ஒரு நல்ல இடமாக மாறும் என்று அவர் மேலும் கூறி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்

1. 100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தல் -அமெரிக்கா
கிட்டத்தட்ட 100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் கூறி உள்ளார்.
2. இரக்கமின்றி சிறுவனைத் தாக்கிய டியூசன் டீச்சர்
இரக்கமின்றி சிறுவனைத் தாக்கிய டியூசன் டீச்சரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. இருப்பிடத்துக்குள் நுழைந்த பாம்பை தடுத்த பூனை
பூனையின் இருப்பிடத்துக்குள் விஷப்பாம்பு ஒன்று நுழைவதை தடுத்த பூனை அதனை தைரியமாக தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
4. ஓடிய ரெயிலில் தவறி விழுந்த பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் வீடியோ
மும்பையில் ஓடிக்கொண்டிருந்த ரெயிலில் தொங்கியபடி பயணித்த இளம்பெண், தவறி விழும் வீடியோ காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. ஏழைக்கு மனைவியா இருக்கலாம்... கோழைக்கு மனைவியா இருக்க முடியாது... வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை
ஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா கோழைக்கு மனைவியா இருக்க முடியாது என ஆவடியை சேர்ந்த ஆனந்தி தான் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு எழுதி வைத்துள்ள கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.