உலக செய்திகள்

சூழ்ச்சி செய்யும் பாகிஸ்தானை எவ்வாறு சமாளிப்பது என்று இந்தியாவுக்கு தெரியும் -ஐ.நா இந்தியத் தூதர் + "||" + Have Handled Pak's 'One-Tricky Pony' Act on Kashmir: India's Stern Message Ahead of UNGA

சூழ்ச்சி செய்யும் பாகிஸ்தானை எவ்வாறு சமாளிப்பது என்று இந்தியாவுக்கு தெரியும் -ஐ.நா இந்தியத் தூதர்

சூழ்ச்சி செய்யும் பாகிஸ்தானை எவ்வாறு சமாளிப்பது என்று இந்தியாவுக்கு தெரியும் -ஐ.நா இந்தியத் தூதர்
சூழ்ச்சி செய்யும் மட்டக் குதிரையை எவ்வாறு சமாளிப்பது என்று இந்தியாவுக்கு நன்றாகவே தெரியும் என ஐக்கிய நாடுகளுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது. 

இந்த நிலையில்  73-வது ஐக்கிய நாடுகள் சபை 73 வது கூட்டம் இன்று தொடங்குகிறது. முன்னதாக   ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது ,

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பினால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த அவர் 

 ஒரு சூழ்ச்சி செய்யும் மட்டக் குதிரை, இந்தியாவின் அங்கமான காஷ்மீர் விவகாரத்தில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. ஆனால் இதுபோன்ற செயலை இந்தியா ஏற்கனவே பல முறை வெற்றிகரமாக சமாளித்துள்ளது, இம்முறையும் அதனை சமாளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் என்பது சர்வதேசக் கூட்டமாகும், இதில் சர்வதேச விவகாரங்கள்தான் பேசப்பட வேண்டுமே தவிர, தாங்கள் எந்த விஷயத்தில் மிக ஆர்வமாக செயல்படுகிறோமோ அதைப் பற்றி பேசக்கூடாது.  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடக்கம்
ஜம்முவில் உள்ள பூஞ்ச் - ஆக்கிரமிப்பு காஷ்மீர் ரவாலாகோட் பகுதிகளுக்கு இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கியது.
2. பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலக கோப்பையை வெல்ல முடியாது -பாகிஸ்தான் வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அறிவுரை
பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளாசி உள்ளார்.
3. வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது - இந்திய விமானப்படை
வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
4. பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை: இந்தியா-அமெரிக்கா கூட்டாக வலியுறுத்தல்
பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க இந்தியா-அமெரிக்கா அரசுகள் கூட்டாக வலியுறுத்தி உள்ளது.
5. இந்தியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள் உடலை பாகிஸ்தான் தேடுகிறது -மோடி சொல்கிறார்
இந்தியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகள் உடலை பாகிஸ்தான் தேடுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.