உலகைச் சுற்றி


உலகைச் சுற்றி
x
தினத்தந்தி 24 Sep 2018 11:00 PM GMT (Updated: 24 Sep 2018 7:08 PM GMT)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை தகுதிநீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.


* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை தகுதிநீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில் அவர் பிரதமராகவில்லை என்பதால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என நீதிபதிகள் கூறினர்.

* ரோஹிங்கியா பிரிவினர் மீது இனப்படுகொலையை அரங்கேற்றிய மியான்மர் ராணுவ தளபதி மற்றும் உயர் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. கூறியிருந்தது. ஆனால், தங்கள் நாட்டு இறையாண்மை விவகாரத்தில் தலையிட ஐ.நா. வுக்கு உரிமையில்லை என ராணுவ தளபதி கூறியுள்ளார்.

* ரஷியாவில் சட்டத்தை மீறி போராட்டம் நடத்தியதாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி ஒருமாத சிறைத்தண்டனைக்கு பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதே குற்றச்சாட்டில் மீண்டும் அவர் நேற்று கைது செய்யப்பட்டதாக அவரது ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

* கியூபாவின் புதிய அதிபர் மிகுவேல் டயாஸ்-கேனல் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல் முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் இறங்கிய அவர், தங்கள் நாடு மீது வர்த்தக தடை போட்டிருக் கும் அந்த நாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

* ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு இருக் கும் நிலையில், எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்க சந்தைகள் கடுமையாக்கி இருக்கின்றன. எனவே வருகிற மாதங்களில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலருக்கு மேல் உயரும் என கூறப்படுகிறது.


Next Story