150 சிறுமிகளின் பிணங்களை தோண்டியெடுத்து பொம்மைகளாக மாற்றி பிறந்த நாள் கொண்டாடியவர்


150 சிறுமிகளின் பிணங்களை தோண்டியெடுத்து பொம்மைகளாக மாற்றி  பிறந்த நாள் கொண்டாடியவர்
x
தினத்தந்தி 25 Sep 2018 12:12 PM GMT (Updated: 25 Sep 2018 12:12 PM GMT)

150 சிறுமிகளின் பிணங்களை தோண்டியெடுத்து பொம்மைகளாக மாற்றி பிறந்த நாள் கொண்டாடிய அபூர்வ சம்பவம்.

தினமும் 20 மைல் தூரம் நடந்து 752 கல்லறைகளை ஆராய்ந்து 150 சிறுமிகளின் பிணங்களை தோண்டியெடுத்த ஒரு நபர் அந்த பிணங்களை பொம்மைகளாக மாற்றி அவைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடிய அபூர்வ சம்பவம் ஒன்று ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.

மத்திய ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட்  நகரைச் சேர்ந்த வரலாற்றாளரான அனடோலி மோஸ்க்வின் (46), சிறுமிகளின் பிணங்கள் மீது கொண்ட ஆர்வத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். விடுமுறைக்காக சென்றிருந்த மோஸ்க்வின்  பெற்றோர் வீடு திரும்பிய போது வீடு முழுவதும் விதம் விதமாக வண்ணமயமாக உடையணிந்த பொம்மைகள் இருப்பதைக் கண்டனர்.

பின்னர் அவை கல்லறைகளிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உடல்களால் செய்யப்பட்டவை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். சிறுவயதாக இருக்கும்போது இறந்த ஒரு 11 வயது சிறுமியின் முகத்தில் முத்தமிட அவர் கட்டாயப்படுத்தப்பட்டதிலிருந்து, சிறுமிகளின் பிணங்கள் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார் அந்த நபர்.

வெளியான வீடியோ ஒன்றில் வீடு முழுவதும் பொம்மைகளாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பிணங்களையும் ஏராளமான வண்ணமயமான உடைகளையும் காணமுடிகிறது. அது மட்டுமின்றி அவர் தோண்டி எடுத்த ஒவ்வொரு பிணம் குறித்த தகவல்களையும் அவர் கணினியில் சேமித்து வைத்துள்ளதோடு அவைகளுக்கு பிறந்த நாளும் கொண்டாடியிருக்கிறார். கைது செய்யப்பட்டுள்ள மோஸ்க்வின், நீண்ட கண்காணிப்புக்குப் பின் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படப்போவதில்லை, மாறாக மனநல மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட உள்ளது.

Next Story