உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 26 Sep 2018 11:15 PM GMT (Updated: 26 Sep 2018 9:28 PM GMT)

வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச விரும்புவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறி உள்ளார்.


* வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ், ராணுவ மந்திரி விளாடிமிர் பத்ரினோ லோபஸ், தகவல் துறை மந்திரி ஜார்ஜ் ரோட்ரிக்ஸ், செயல் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோர் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இதுபற்றி நிக்கோலஸ் மதுரோ கருத்து தெரிவிக்கையில், “ எங்கள் மீதான பொருளாதார தடையினால் பலனில்லை. நான் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேருக்கு நேர் சந்திக்க விரும்புகிறேன்” என கூறினார்.

* அமெரிக்காவுக்கோ, அதன் குடிமக்களுக்கோ, நட்பு நாடுகளுக்கோ ஈரான் ஆட்சியாளர்கள் தீங்கு செய்தால், அதற்கு மிக மோசமான விலையைக் கொடுக்க வேண்டியது வரும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எச்சரித்துள்ளார்.

* இருதரப்பு உறவு மேலும் மோசமாகி விடாமல் தடுக்க வேண்டும் என்றால் தைவானுக்கு அமெரிக்கா போர் விமான பாகங்களை ஏற்றுமதி செய்யக்கூடாது, அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சீனா குரல் கொடுத்துள்ளது.

* ஜப்பானுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நிலவுகிற பதற்றத்தை தணிக்கிற வகையில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை உச்சி மாநாட்டில் சந்தித்து பேச விரும்புவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே கூறி உள்ளார்.

Next Story