லண்டன் உட்பட பல நகரங்களில் முடங்கியது இன்ஸ்டகிராம்


லண்டன் உட்பட பல நகரங்களில் முடங்கியது இன்ஸ்டகிராம்
x
தினத்தந்தி 3 Oct 2018 12:13 PM GMT (Updated: 3 Oct 2018 12:13 PM GMT)

லண்டன் உட்பட பல நகரங்களில் இன்ஸ்டகிராம் முடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனம்  இன்ஸ்டகிராம். சமூக வலைதள பயனாளர்கள் மத்தியில் பிரபலமானவைகளில் ஒன்றாக உள்ள இன்ஸ்டகிராம், புகைப்படங்களை ஷேர் செய்யும் வசதியை கொண்டதாகும். 

உலக அளவில், நெட்டிசன்கள் மத்தியில் இன்ஸ்டகிராம் தனித்த இடத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று டுவிட்டரில் திடீரென இன்ஸ்டகிராம்டைவுன் என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆனது.

லண்டன், சிங்கப்பூர், சான் பிரான்ஸிஸ்கோ உள்ளிட்ட நகரங்களைச்சேர்ந்த பல பயனாளர்கள், தங்கள் டுவிட்டரில், இன்ஸ்டகிராம்டைவுன் என்ற ஹேஷ்டேக் பதிவுகளை வெளியிட்டு திணறடிக்கச்செய்தனர். டைம்லைனில் ரீஃபிரஷ் ஆகாமல் எர்ரர் மேசேஜ் (error message)  காண்பித்ததாக ரியூட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரம் குறித்து இன்ஸ்டகிராம் தரப்பிலோ, பேஸ்புக் நிறுவனம் தரப்பிலோ எந்த கருத்தும் வெளியாகவில்லை.  

வடக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் இன்ஸ்டகிராம் முடங்கியதாக பரவலாக செய்திகள் வெளியாகின. 

Next Story