இந்திய ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் பயன்படுத்தலாம்


இந்திய ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் பயன்படுத்தலாம்
x
தினத்தந்தி 8 Oct 2018 5:28 AM GMT (Updated: 8 Oct 2018 5:28 AM GMT)

இந்திய ஓட்டுநர் உரிமத்தை வெளிநாடுகளில் வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளாலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வெளிநாடுகளில் சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் குறிப்பிட்ட சில நாடுகளில் தங்களது இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, அமெரிக்கா, சுவிட்ஸ்ர்லாந்து, நியூசிலாந்து தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்திய ஓட்டுநர் உரிமத்தை வாகனங்கள் ஓட்டும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

அமெரிக்கா:

அமெரிக்காவில் இந்தியர்கள் தங்களது இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் ஒரு வருடம் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி இருக்கக்கூடாது.

பிரான்ஸ்:

பிரான்ஸ் நாட்டிலும் இந்திய ஓட்டுநர் உரிமைத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாட்டிலேயும் ஒருவருட காலம் தான் அனுமதி உண்டு. ஆனால் குறிப்பிட்ட சில வாகங்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

நார்வே:

நார்வே நாட்டில் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி 3 மாதங்கள் வாகனங்களை இயக்க முடியும்.

சுவிட்சர்லாந்து, நியுசிலாந்து:

இந்திய ஓட்டுநர் உரிமத்தை ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வாகனம் ஓட்டுபவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும். 

ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா:

இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா:

இந்திய ஓட்டுநர் உரிமைத்தை பயன்படுத்திகொள்ளலாம். ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Next Story