உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 8 Oct 2018 11:00 PM GMT (Updated: 8 Oct 2018 6:53 PM GMT)

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

* பல்கேரியாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான விக்டோரியா மரினோவா (வயது 30), ரூஸ் நகரில் உள்ள ஒரு பூங்காவில் கடந்த சனிக்கிழமை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் கோஸ்டா ரிகாவில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அந்த நாடுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் அளவில் சேதங்கள் ஏற்பட்டன. அந்த நாடுகளில் மழை தொடர்பான சம்பவங்களில் 12 பேர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைதியில், கடந்த சனிக் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. இதற்கிடையே நேற்று அங்கு மீண்டும் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியது. நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து மீண்டுவர ஹைதிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஐ.நா. தயாராக இருப்பதாக அதன் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.

* பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் குளிர்பானங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

* இந்தோனேசியாவில் நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துள்ளது.


Next Story