ஒரே நேரத்தில் 160 சிகரெட்டுகளை புகைத்து, உலக சாதனைக்கு முயன்ற தாத்தாவின் முயற்சி தோல்வி


ஒரே நேரத்தில் 160 சிகரெட்டுகளை புகைத்து, உலக சாதனைக்கு முயன்ற தாத்தாவின் முயற்சி தோல்வி
x
தினத்தந்தி 10 Oct 2018 9:40 AM GMT (Updated: 10 Oct 2018 9:40 AM GMT)

அமெரிக்காவை சேர்ந்த ஜிம் புரோல் ஒரே நேரத்தில் 160 சிகரெட்டுகளை புகைத்து, உலக சாதனைக்கு முயன்றவரின் முயற்சி தோல்வி அடைந்தது.

நியூயார்க்,

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் ஜிம் புரோல் (வயது 66)  நூற்றுக்கணக்கில் ஸ்ட்ரா மற்றும் சிகரெட்டுகளை வாயில் வைத்து, பல உலக சாதனைகளைப் படைத்தவர். 

 2003ம் ஆண்டு ஒரே நேரத்தில் 159 சிகரெட்டுகளை பற்றவைத்து புகைத்து, உலக சாதனை படைத்தார்.   தற்போது தமது சாதனையை அவரே முறியடிக்க விரும்பினார். வயது மூப்பின் காரணமாக முடிவில் அவரது வாய்க்குள் 130 சிகரெட்டுகளை மட்டுமே வைக்க முடிந்தது.  

இதனால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் விரைவில் தனது சாதனையை தானே முறியடிப்பேன் என்று ஜின்புரோல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Story