உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
வடகொரிய தலைவருடனான சந்திப்புக்காக 3 அல்லது 4 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.

* தென் ஆப்பிரிக்காவில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அந்த நாட்டின் நிதி மந்திரி நிஹ்லான் ஹலா நேனே பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை அதிபர் சிரில் ராமபோசா ஏற்றுக்கொண்டு விட்டார்.

* நிக்கி ஹாலே விலகலால் காலியாகிற ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதர் பதவிக்கு நான் வரப்போவதில்லை என்று டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியுள்ள ‘மைக்கேல்’ புயல், மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய 4-ம் வகை புயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வசிக்கிற சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

* கருச்சிதைவு செய்து ஒரு உயிரைக் கொல்வது என்பது, கூலிப்படை அமர்த்தி கொல்வது போன்றது என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

* வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடனான சந்திப்புக்காக 3 அல்லது 4 இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகிறார்.

* மாலத்தீவு அதிபர் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றுள்ளன, அந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தோல்வியைத் தழுவிய அப்துல்லா யாமீன் வழக்கு தொடுத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி சந்திப்பு
பிரதமர் மோடியை ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் இன்று சந்தித்து உள்ளார்.
2. ஈரான் வெளியுறவு துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
ஈரான் வெளியுறவு துறை மந்திரியுடன் மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரு தரப்பு மற்றும் மண்டல விவகாரங்கள் பற்றி இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
3. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சீனாவுக்கு திடீர் பயணம்
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் திடீர் பயணமாக சீனாவுக்கு சென்றார்.
4. தி.மு.க. தலைவரான பின் டெல்லிக்கு முதல் பயணம்: சோனியாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு - எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்
டெல்லி சென்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பா.ஜனதா வுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று (திங்கட்கிழமை) பங்கேற்கும் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.