உலக செய்திகள்

"பிஸ் ஆன் மி" நியூயார்க் சாலையில் வைக்கப்பட்ட டிரம்ப் சிலை + "||" + Tiny statues of Trump with signs inviting dogs to 'pee on me' appear across Brooklyn

"பிஸ் ஆன் மி" நியூயார்க் சாலையில் வைக்கப்பட்ட டிரம்ப் சிலை

"பிஸ் ஆன் மி"  நியூயார்க் சாலையில் வைக்கப்பட்ட டிரம்ப் சிலை
நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக நியூயார்க் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலை வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நியூயார்க்,

அமெரிக்க நாட்டில் புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் பகுதியில் “ என் மீது சிறுநீர் கழிக்கவும்” என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.  இந்த சிலைகளை  பில் கேப்லே என்பவர் வடிவமைத்துள்ளார். 

இந்த சிலையை வடிவமைத்துள்ள  கேப்லே கூறுகையில்,

டிரம்ப் ஒரு அதிபராக செயல்படவில்லை.  எனவே இந்த கோபத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு சிலைகளை வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் பகுதியில் உள்ள சாலையோரங்களில் உள்ள புல் பகுதியில் டிரம்ப் சிலை  நிறுவப்பட்டு  "என் மீது சிறுநீர் கழிக்கவும்" என்ற வாசகம் இடம்பெற்றது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.