உலக செய்திகள்

எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தொடர் தாக்குதல்; 17 பேருக்கு மரண தண்டனை + "||" + Egypt condemns 17 to death for IS church attacks

எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தொடர் தாக்குதல்; 17 பேருக்கு மரண தண்டனை

எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தொடர் தாக்குதல்; 17 பேருக்கு மரண தண்டனை
எகிப்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் தொடர்புடைய 17 பேருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கெய்ரோ,

எகிப்து நாட்டில் சன்னி பிரிவு முஸ்லிம்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.  இவர்களின் மக்கள் தொகையில் காப்டிக் கிறிஸ்தவர்கள் 10 சதவீதம் உள்ளனர்.  

இந்த நிலையில், எகிப்தின் கெய்ரோ, அலெக்சாண்டிரியா மற்றும் நைல் டெல்டா நகரான தண்டா ஆகிய நகரங்களில் காப்டிக் கிறிஸ்தவர்களின் ஆலயங்கள் மீது கடந்த 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இதில் 74 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர்.  அவசரகால நிலையை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த தாக்குதல்களை நடத்தினோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 பேருக்கு எகிப்திய ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டு உள்ளது.  இதேபோன்று 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் 10 பேருக்கு 10 முதல் 15 வருடங்கள் வரையிலான சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தகாத உறவில் ஈடுபட்டால் மரண தண்டனை: புரூனேயில் புதிய சட்டம், 3-ந்தேதி அமல்
தகாத உறவில் ஈடுபட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம், புரூனே நாட்டில் 3-ந் தேதி அமலுக்கு வருகிறது.
2. எகிப்தில் தொடர்ந்து நிறைவேற்றப்படும் மரண தண்டனையை நிறுத்தி வைக்க ஐ.நா. வலியுறுத்தல்
எகிப்தில் தொடர்ந்து நிறைவேற்றப்படும் மரண தண்டனையை நிறுத்தி வைக்க ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
3. 75 வயது பாட்டியை கற்பழித்து கொன்ற 25 வயது வாலிபருக்கு மரண தண்டனை
75 வயது பாட்டியை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
4. கனடாவை சேர்ந்தவருக்கு சீனாவில் மரண தண்டனை இரு நாட்டு உறவு பாதிப்பு
கனடாவை சேர்ந்தவருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது இதற்கு கனட பிரதமர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
5. ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி
ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு போட்டது.