உலக செய்திகள்

ஈரானிடம் இருந்து எண்ணெய்; ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியா; அமெரிக்கா எச்சரிக்கை + "||" + Not helpful says US on India s plans to buy Iran oil Russia s S-400 air missiles

ஈரானிடம் இருந்து எண்ணெய்; ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியா; அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானிடம் இருந்து எண்ணெய்; ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியா; அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானிடம் இருந்து எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.


வாஷிங்டன்,

அமெரிக்காவின் பொருளாதார தடை என்ற பூச்சாண்டியை புறந்தள்ளி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை தொடர முடிவு செய்துள்ள இந்திய அரசு, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா அதற்கான ஒப்பந்தத்தை செய்ததும் பொருளாதார தடைகள் பாயலாம் என்று பார்க்கப்பட்டது, ஆனால் தனக்கும் இழப்பு என அமெரிக்கா அமைதி காத்தது.
இப்போது இவ்விவகாரத்தில் அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது இந்தியாவின் முடிவு இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவாது என்று எச்சரித்துள்ளது.

“அமெரிக்காவின் எதிர்ப்பை மீறியும் ஈரானிடம் இருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை கட்டமைப்பை வாங்கும் இந்தியாவின் நகர்வு எந்தவகையிலும் இருநாட்டு (இந்தியா, அமெரிக்கா) உறவுக்கு உதவ போவது கிடையாது. இந்தியாவின் மீதான நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பார்த்துக் கொள்வார்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

இந்தியா மீது பொருளாதராத் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “ அதிபர் டிரம்ப்தான் அதுபற்றி கூற வேண்டும்.  அதிபருடைய பதிலை நான் கூற முடியாது. நான் வெள்ளை மாளிகை சார்பாக தான் பேச முடியும்” என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது என்ற அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
2. ஈரான் பாதுகாப்பு படையை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது அமெரிக்கா
ஈரான் பாதுகாப்பு படையை பயங்கரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
3. உலகைச் சுற்றி...
ஈரானின் ஹார்மோக்கன் மாகாணத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
4. ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு: பருத்தி வயலில் குட்டைபோல் தேங்கி நின்ற கச்சா எண்ணெய்
திருவாரூர் அருகே பருத்தி வயலில் கச்சா எண்ணெய் குட்டைபோல் தேங்கி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. மத்தியஸ்தம் செய்து பதற்றத்தை தணிக்க தயார் -அமெரிக்கா, ரஷியா அறிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து பதற்றத்தை தணிக்க தயார் என அமெரிக்கா மற்றும் ரஷியா அறிவித்துள்ளது.