உலக செய்திகள்

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா + "||" + The decision to buy oil from Iran will not benefit India - USA

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது - அமெரிக்கா
அடுத்த மாதம் 4-ந்தேதிக்கு பிறகு, ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முடிவு இந்தியாவுக்கு பலன் தராது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வாஷிங்டன்,

ஈரானுடன் 2015-ம் ஆண்டு செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் வருகிறது.


மேலும் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந்தேதி தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து எந்த நாடும் எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என்றும் அமெரிக்கா கெடு விதித்து உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அமெரிக்காாவின் இந்த எச்சரிக்கை இந்தியாவுக்கு மேலும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

என்றபோதிலும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. நவம்பர் 4-ந்தேதிக்கு பிறகும், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான உத்தரவை மத்திய அரசுக்கு சொந்தமான 2 எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு இருப்பதாக அண்மையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருந்தார்.

இதேபோல் ரஷியாவில் இருந்து எஸ்-400 டிரைம்ப் ரக ஏவுகணைகளை வாங்குவதற்கும் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் ரஷியாவிற்கு பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, இந்த ஏவுகணைகணை இந்தியா வாங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹீதர் நயூர்ட் வாஷிங்டன் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. இதையும் மீறி நவம்பர் 4-ந்தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து எந்த நாடும் எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது.

மாறாக இறக்குமதி செய்யப்போகும் நாடுகளைப் பற்றி கேட்கிறீர்கள். இந்த தடை குறித்து உலகம் முழுவதும் எங்களது நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் பேசி வருகிறோம். ஈரான் மீதான எங்களுடைய கொள்கை நிலைப்பாட்டை அந்த நாடுகளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிவித்தும் வருகிறோம்.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரைம்ப் ரக ஏவுகணைகளை வாங்க முடிவு செய்திருப்பது எந்த வகையிலும் இந்தியாவுக்கு பலன் அளிக்காது.

ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் நடவடிக்கை குறித்து நாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை ஜனாதிபதி டிரம்ப் விரைவில் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்புடைய செய்திகள்

1. ஈரானிடம் இருந்து எண்ணெய்; ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியா; அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானிடம் இருந்து எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
2. ஈரான்: பலத்த மழை, வெள்ளம் - 7 பேர் பலி
ஈரானில் பெய்து வரும் பலத்த மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.
3. ஈரானில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டும்: ஈரானிய வெளியுறவு அமைச்சர்
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் தடைகளை மீறி இந்தியா எங்களிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறி உள்ளார்.
4. ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு; 24 பேர் பலி
ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் உள்பட 24 பேர் பலி. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் கைதாயினர்.
5. நாடாளுமன்றம் மூலம் ஈரான் பொருளாதார மந்திரி பதவி நீக்கம்
ஈரான் நாட்டின் பொருளாதார மந்திரியாக மசூத் கர்பாசியன் பதவி வகித்து வந்தார். அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.