உலக செய்திகள்

நேபாள நாட்டில் மலையேற்றம் சென்ற 8 பேர் பனி புயலில் சிக்கி பலி + "||" + Avalanche hits Nepal peak; 5 South Koreans among 9 killed

நேபாள நாட்டில் மலையேற்றம் சென்ற 8 பேர் பனி புயலில் சிக்கி பலி

நேபாள நாட்டில் மலையேற்றம் சென்ற 8 பேர் பனி புயலில் சிக்கி பலி
நேபாள நாட்டில் மலையேற்றம் சென்ற 8 பேர் பனி புயலில் சிக்கி பலியாகியுள்ளனர்.
காத்மண்டு,

நேபாள நாட்டின் மேற்கே குர்ஜா மலை சிகரம் உள்ளது.  இங்கு மலையேற்றம் மேற்கொள்வதற்காக குழு ஒன்று குர்ஜா கிராமத்தில் இருந்து கடந்த 7ந்தேதி புறப்பட்டு சென்றுள்ளது.  அவர்களில் 9 பேர் கடுமையான பனி புயலில் சிக்கி கொண்டனர்.  இவர்களில் 5 பேர் தென்கொரிய மலையேற்ற குழுவை சேர்ந்தவர்கள்.  இவர்கள் கிம் சாங்-ஹோ என்பவர் தலைமையில் சென்றுள்ளனர்.

கிம் இதுவரை 14 மலை சிகரங்களில் 8 ஆயிரம் மீட்டர் வரை சென்ற முதல் தென்கொரியர்.  இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றவர்களின் அடையாளங்கள் காணப்படவில்லை.

இதனை அடுத்து மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இமாச்சலப்பிரதேசம்: மலையேற்றம் சென்ற 16 பேரின் தொடர்பு துண்டிப்பு
இமாச்சலப்பிரதேசத்தில் சம்பா பகுதியில் மலையேற்றம் சென்ற 10 வெளிநாட்டினர் உள்பட 16 பேரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது
2. மலையேற்றம் சென்ற ஐஐடி மாணவர்கள் பத்திரமாக உள்ளனர்: இமாச்சல பிரதேச முதல் மந்திரி தகவல்
மலையேற்றம் சென்று சிக்கிய ஐஐடி மாணவர்கள் பத்திரமாக உள்ளதாக இமாச்சல பிரதேச முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.