ஜெர்மனி: பெண், பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு - ரெயில் நிலையம் மூடப்பட்டது


ஜெர்மனி: பெண், பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு - ரெயில் நிலையம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 15 Oct 2018 11:00 PM GMT (Updated: 15 Oct 2018 7:24 PM GMT)

ஜெர்மனியில் பெண் ஒருவர் பிணைக்கைதியாக பிடிபட்டதால், ரெயில் நிலையம் மூடப்பட்டது.

பெர்லின்,

ஜெர்மனி நாட்டில் மைன்ஸ் நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடை உள்ளது. அதனுள் புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால், ரெயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நிலையம் மூடப்பட்டது. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

போலீசார் வந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவர் லேசாக காயம் அடைந்து இருந்தார். மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். பயங்கரவாதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story