உலக செய்திகள்

பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு + "||" + Belgium Vice President M Venkaiah Naidu at the opening ceremony of the 12th ASEMSummit at Europa Building in Brussels, today

பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு

பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றார்.
பெல்ஜியம்,

பெல்ஜியம் நாட்டுக்கு சென்றுள்ள  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளின் மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, சுற்றுலா ஆகிய துறைகள் குறித்து ஆசிய, ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

இதில் பங்கேற்பதற்காக பெல்ஜியம் சென்றுள்ள வெங்கையா நாயுடுவுக்கு பிரஸ்சல்ஸ் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெல்ஜியம் மன்னர் பிலிப், பிரதமர் சார்லஸ் மைக்கேல் ஆகியோரை வெங்கய்யா நாயுடு சந்தித்துப் பேசுகிறார். பல்வேறு நாட்டு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார்.