சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு - தலைமை தந்திரி அறிவிப்பு


சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு - தலைமை தந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2018 7:08 AM GMT (Updated: 19 Oct 2018 7:08 AM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று கோவிலுக்குள் பிரவேசிக்க முயன்ற இரு பெண்களை சன்னிதானம் பகுதியில் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து இரு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது. 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்வதை அனுமதிக்கமாட்டோம் என்று பக்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் இப்போராட்டத்திற்கு தந்திரி தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு பேசுகையில், ''கோயிலைப் பூட்டி, சாவியை ஒப்படைத்து விட்டுச் செல்ல முடிவு செய்துள்ளோம். அய்யப்ப பக்தர்களுக்கு ஆதரவாக இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Next Story