அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் 6 லட்சம் இந்தியர்கள்


அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் 6 லட்சம் இந்தியர்கள்
x
தினத்தந்தி 20 Oct 2018 11:21 AM GMT (Updated: 20 Oct 2018 11:21 AM GMT)

அமெரிக்காவில் 600,000-க்கும் அதிகமான இந்தியர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரீன் கார்டுக்காக காத்திருக்கிறார்கள்.

வாஷிங்டன்

அமெரிக்காவில் 600,000-க்கும் அதிகமான இந்தியர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரீன் கார்டுக்காக  காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிடத்தை 60,394 பேர் மட்டுமே பெற்றுள்ளனர். இது அமெரிக்காவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.

தற்போதைய கட்டுப்பாட்டின்கீழ், இந்தியாவில் இருந்து திறமையான குடியேறிகள்  நாட்டின்  வரம்பிற்குள் 25-92 ஆண்டுகளுக்கு கிரீன்  கார்டுக்காக காத்திருக்க வேண்டும்.  என GCReforms.org என்ற இணையத்தில் கூறப்பட்டு உள்ளது. இது அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களளின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்ற அமெரிக்காவில் வாழும் இந்திய புலம்பெயர்ந்தோர் உறுப்பினர்களால் நிறுவப்பட்ட ஒரு இணையதளம் ஆகும்.

ஏப்ரல் 2018 வரை 6,32,219 இந்திய குடியேறியவர்கள் மற்றும் அவர்களது கணவன்மார் மற்றும் சிறு குழந்தைகள் ஆகியோர் கிரீன் கார்டுகளுக்கு காத்திருக்கின்றனர். 2017-ல் கிரீன் கார்டு பெற்ற  இந்தியர்கள்  60,394. வேலைவாய்ப்பு அடிப்படையிலான விருப்பங்களுக்கு அதிகபட்சம் 23,569 எச்1பி விசாக்கள்  வழங்கப்பட்டு உள்ளது.

2015-ல், 64,116 இந்தியர்களுக்கு  சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிடம் வழங்கபட்டது அது    2016 ஆம் ஆண்டில் அடுத்த ஆண்டு 64,687 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எச் 1பி  விசா வைத்திருப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்பு அடிப்படையிலான விருப்பத்தேர்வுகளில் - 137,855 கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டன.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டு உள்ள தகவலில் அமெரிக்க குடிமக்களின் உடனடி உறவினர்களுக்கு - அமெரிக்க குடிமக்கள் - துணைவர்களுக்கு கிரீன் கார்டுகள் வழங்கபட்டது.   (292,909), குழந்தைகள் ( 74,989)   மற்றும் பெற்றோருக்கு (148610)  வழங்கப்பட்டது.

புள்ளிவிவரங்கள் படி 2017-ல் மொத்தம் உள்ள   1,127,167  வெளிநாட்டினரில்   10 லட்சம் பேர்  கிரீன் கார்டுகளைப் பெற்றனர். முந்தைய ஆண்டு 2016  1,183,505 வெளிநாட்டவர்கள் கிரீன் கார்டுகளை பெற்றனர்.  2015 ல் 1,051,031 வெளிநாட்டவர்கள் கிரீன் கார்டுகளை பெற்றனர்.

2017 ஆம் ஆண்டில் அதிகபட்ச கிரீன்  கார்டு பெற்ற்வர்கள் ஆசிய நாட்டை சேர்ந்தவர்கள் (424,743) மற்றும் வட அமெரிக்கா (413,650) 
இந்த  பட்டியலில் சீனா 71,565 கிரீன் கார்டுகள் முதலிடத்திலும்,தொடர்ந்து  கியூபா (65,028), இந்தியா (60,394)  மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இருப்பினும், இந்தியா மற்ற நாடுகளிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் அது அதிகபட்சமாக மக்கள் இங்கு கிரீன் கார்டுக்காக காத்திருக்கிறார்கள்.

Next Story