அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்


அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை அமெரிக்க உற்பத்தி செய்யும் - டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 23 Oct 2018 11:12 AM GMT (Updated: 23 Oct 2018 11:12 AM GMT)

அமெரிக்காவில் அதிக அளவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யப் போவதாக அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்கா - ரஷ்யா இடையே நிலவி வந்த பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளிடையே அணு ஆயுத உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. அப்போதைய அதிபர்கள் ரீகனும், மிக்கேல் கோர்பசேவும் இதில் கையெழுத்திட்டிருந்தனர். இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்ததற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் அதிக அளவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது குறித்து பிற நாடுகள் புரிந்து கொள்ளும்வரை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே ரஷ்யா ஒப்பந்தத்தை மதித்துப் பின்பற்றவில்லை என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

"நீங்கள் விரும்பும் எவருக்கும் இது அச்சுறுத்தல் தான்," என டிரம்ப் கூறினார். "இது சீனாவை உள்ளடக்கியது, அது ரஷ்யாவை உள்ளடக்கியது, அது அந்த விளையாட்டை விளையாட விரும்புகிற வேறு எவரையும் உள்ளடக்கியிருக்கிறது என கூறினார்.

சீனா உடன்பாட்டில்  என்று டிரம்ப் குறிப்பிட்டார். ஆனால்   "அவர்கள் சேர்க்கப்பட வேண்டும்" என கூறினார்.

Next Story