பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சீக்கியர்கள் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளித்த போலீசார்


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் சீக்கியர்கள் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளித்த போலீசார்
x
தினத்தந்தி 25 Oct 2018 12:59 PM GMT (Updated: 25 Oct 2018 12:59 PM GMT)

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்பொழுது சீக்கியர்கள் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

பெஷாவர்,

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்குவாவில் 60 ஆயிரம் சீக்கியர்கள் வசிக்கின்றனர்.  இதில் பெஷாவர் நகரில் 15 ஆயிரம் சீக்கியர்கள் உள்ளனர்.  இந்த நிலையில், கைபர் பக்துங்குவா சட்டசபையில் சிறுபான்மை சமூக உறுப்பினர் ஒருவர், மோட்டார் சைக்கிள்கள் ஓட்டும்பொழுது தலைப்பாகை அணிந்த சீக்கியர்கள் ஹெல்மெட் அணிவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரினார்.

இதனை அடுத்து பெஷாவர் நகர போலீசார் இதற்கு அனுமதி அளித்துள்ளனர்.  அதன்படி, தலைப்பாகை அணிந்த சிறுபான்மை சமூகத்தினர் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும்பொழுது ஹெல்மெட் அணிய விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Next Story