டொனால்டு டிரம்பிடம் ஒரே ஒரு ஐபோன் மட்டுமே உள்ளது: வெள்ளை மாளிகை விளக்கம்


டொனால்டு டிரம்பிடம்  ஒரே ஒரு ஐபோன் மட்டுமே உள்ளது: வெள்ளை மாளிகை விளக்கம்
x
தினத்தந்தி 26 Oct 2018 3:38 AM GMT (Updated: 26 Oct 2018 3:38 AM GMT)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் ஒரே ஒரு ஐபோன் மட்டுமே உள்ளது என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மூன்று  செல்போன்கள் வைத்து இருப்பதாகவும்,  பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட அந்த செல்போன்கள் மூலம் டிரம்ப் பேசுவதை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஒட்டுகேட்பதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. 

ஆனால், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியை உடனடியாக விமர்சித்த டொனால்டு டிரம்ப், அந்த செய்தி தவறானது எனவும், மிகவும் அரிதாகவே தான் செல்போன்களை பயன்படுத்துவதாக கூறியிருந்தார். 

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையும் நியூயார்க் டைம்ஸ் செய்தியை மறுத்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், டொனால்டு டிரம்பிடம், ஒரே ஒரு அதிகாரப்பூர்வ ஐபோன்  மட்டுமே இருப்பதாகவும், அந்த செல்போனும் மிகச்சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டது என்றும் தெரிவித்துள்ளது.

Next Story