நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு


நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 30 Oct 2018 5:28 AM GMT (Updated: 30 Oct 2018 5:28 AM GMT)

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது.

வெலிங்டன்,

நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டது. டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 165 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது.  

தலைநகர் வெலிங்டன் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 30 வினாடிகள் அதிர்வு இருந்தது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதேபோல் வடக்கு தீவு, தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. 

நியூசிலாந்து பாரளுமன்ற கட்டிடம் நிலநடுக்கத்தால் குலுங்கியது. இதனால், அவை நடவடிக்கையில் பங்கேற்ற உறுப்பினர்கள் பீதி அடைந்தனர். பாரளுமன்றம்  உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் சேம்பர்ஸ் திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டது. 

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.  இங்கிலாந்து இளவரசர் ஹேரி மற்றும் அவரது மனைவியும் தங்கள் தொண்டு நிறுவனப்பணிகளுக்காக தெற்கு நியூசிலாந்தில் இருந்தனர். அங்கும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 


Next Story