விண்ணில் தோன்றிய கடவுளின் கை, நாசா வெளியிட்ட புகைப்படம்


விண்ணில் தோன்றிய கடவுளின் கை, நாசா வெளியிட்ட புகைப்படம்
x
தினத்தந்தி 31 Oct 2018 5:39 AM GMT (Updated: 31 Oct 2018 6:01 AM GMT)

விண்ணில் தோன்றிய இந்த உருவம் 'கடவுளின் கை' என்று பெயர் சூட்டப்பட்ட புகைப்படம் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது


சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் ஸ்பேஸ் டெலஸ்கோப் ஒன்று விண்ணில் கை வடிவத்தில் தோன்றிய விண்பொருளை (celestial object) புகைப்படம் எடுத்துள்ளது. ஒரு நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டு, அதன் மூலம் வெளியேறிய மாபெரும் மேக பொருட்கள் மூலம் கை போன்ற வடிவம் விண்ணில் உருவாகி உள்ளது. அந்த காட்சியை நாசாவின் நுக்லியர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் டெலஸ்கோப் அர்ரே (Nuclear Spectroscopic Telescope Array) புகைப்படம் எடுத்துள்ளது.

புகைப்படத்தில் உயர் ஆற்றல் எக்ஸ் கதிர்கள் (high-energy X-rays) நீள நிறத்திலும், குறைவான ஆற்றல் கொண்ட எக்ஸ் கதிர்கள் சிகப்பு மற்றும் பச்சை நிறத்திலும் தெரிகிறது என்று நாசா விளக்கம் அளித்துள்ளது.

வெடிப்பில் வெளியான பருப்பொருட்கள் நிஜமாகவே கை போன்ற வடிவத்தை உருவாக்கியதா அல்லது பார்ப்பதற்கு அப்படி தெரிகிறதா என்பது பற்றிய விளக்கம் இல்லை.இருப்பினும் விண்ணில் தோன்றிய இந்த உருவம் 'கடவுளின் கை' என்று பெயர் சூட்டப்பட்டு வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. 




Next Story