உலக செய்திகள்

பிறப்பு குடியுரிமை ரத்து: டொனால்டு டிரம்ப் முடிவுக்கு எதிராக வலுக்கும் விமர்சனங்கள் + "||" + Trump faces widespread criticism for his decision to end birthright citizenship

பிறப்பு குடியுரிமை ரத்து: டொனால்டு டிரம்ப் முடிவுக்கு எதிராக வலுக்கும் விமர்சனங்கள்

பிறப்பு குடியுரிமை ரத்து: டொனால்டு டிரம்ப் முடிவுக்கு எதிராக வலுக்கும் விமர்சனங்கள்
பிறப்பு குடியுரிமை ரத்து செய்யப்படும் என அறிவித்த டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழும்பியுள்ளன.
வாஷிங்டன்,

குடியுரிமை இல்லாமல் அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு அங்கு குழந்தை பிறக்குமாயின் அக்குழந்தைகள் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாவார்கள், இயல்பான இந்தக் குடியுரிமைத் திட்டத்தையும் ஒழிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

அமெரிக்க இடைத் தேர்தலுக்கு முன் குடிபெயர்ந்தவர்களுக்காக விதிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது,

”குடியுரிமை இல்லாது அமெரிக்காவுக்கு குடியேறிய பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி குடியுரிமை கிடையாது என்ற புதிய உத்தரவை விதிக்க விரும்புகிறேன்.  எனது முடிவை வெள்ளை மாளிகை வழக்கறிஞர் பரீசிலனை செய்து வருகின்றன. சிறப்பு உத்தரவு மூலம் இந்த உத்தரவை பிறப்பிக்கும் திட்டம் உள்ளது” என்று தெரிவித்தார்.  டொனால்டு டிரம்பின் இந்த திட்டத்துக்கு அவரது சொந்த கட்சியில் இருந்தே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. 

அமெரிக்க பிரநிதிகள் சபையின் சபாநாயகர் பால் ரியான் கூறும் போது, சிறப்பு உத்தரவு மூலம் பிறப்பு குடியுரிமை சலுகையை உங்களால்(டிரம்ப்) ரத்து செய்ய இயலாது என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. வடகொரியா செயல் யாருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை: டொனால்டு டிரம்ப்
வடகொரியா செயல் யாருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2. டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவவில்லை: முல்லர் குழு அறிக்கை தாக்கல்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவவில்லை என்று முல்லர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. டிரம்ப் -கிம் நாளை சந்திப்பு: வியட்நாமில் உச்ச கட்ட பாதுகாப்பு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு நாளை நடைபெறுகிறது.
4. டிரம்பை சந்திப்பதற்காக ஹனோய் நகருக்கு ரயிலில் புறப்பட்டார் கிம் ஜாங் அன்
டொனால்டு டிரம்பை சந்திப்பதற்காக ஹனோய் நகருக்கு வடகொரிய அதிபர் ரயில் மூலமாக புறப்பட்டுச்சென்றுள்ளார்.
5. நான் அதிபராகாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போர் வந்திருக்கும்: டிரம்ப் சொல்கிறார்
தென்கொரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.