உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 31 Oct 2018 11:00 PM GMT (Updated: 31 Oct 2018 4:50 PM GMT)

* உள்நாட்டுப்போர் நடந்து வருகிற ஏமன் நாட்டில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் வலியுறுத்தி உள்ளார்.

* ரஷியாவில் அர்காங்கெல்ஸ்க் நகரில் உள்ள மத்திய பாதுகாப்பு படை அலுவலகத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

* சிரியாவுக்கான ஐ.நா. சபையின் சிறப்பு தூதராக நார்வே நாட்டைச் சேர்ந்த ஜெயிர் பெடர்சென் நியமிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிவித்துள்ளார்.

* ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டுள்ள நாடுகளுக்கு பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலிக்கிறது.


Next Story