உலகைச் சுற்றி....


உலகைச் சுற்றி....
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 4 Nov 2018 5:01 PM GMT)

* ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவை சேர்ந்த பிரிட்டி மார்கோஸ் என்பவருக்கு லாட்டரியில் 2.72 மில்லியன் டாலர் (சுமார் ரூ.19 கோடியே 85 லட்சம்) பரிசு விழுந்துள்ளது.

* பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் ஆசியா பீவி என்ற கிறிஸ்தவ பெண்ணை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து அங்கு தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. அவற்றில் வன்முறை வெடித்துள்ளது. பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்படுகிறது. இது தொடர்பாக நேற்று நாடு முழுவதும் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

* அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்கள் மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வர வேண்டும், அப்படி செய்யாவிட்டால் மீண்டும் தாங்கள் அணு ஆயுத கொள்கைக்கு திரும்புவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டி வரும் என்று கூறி உள்ளது.

* பாகிஸ்தானில் வறுமையையும், ஊழலையும் ஒழிப்பதற்கு தனது அரசு முன்னுரிமை அளிக்கும் என்று பீஜிங்கில் பேட்டி அளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார்.

* இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29–ந் தேதி விபத்துக்குள்ளாகி 189 பேரை பலி கொண்ட லயன் ஏர் விமானத்தின் எப்.டி.ஆர். என்னும் விமான தகவல் பதிவு கருவி மீட்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த விமானத்தின் 69 மணி நேர பயணம் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த தகவல்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறபோது விபத்துக்கான காரணம் தெரியவரலாம்.

Next Story