உலக செய்திகள்

ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் : இலங்கை சபாநாயகர் + "||" + The sovereignty of the people is eroded each day. Convene Parliament immediately says ranil

ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் : இலங்கை சபாநாயகர்

ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் : இலங்கை சபாநாயகர்
ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் என்று இலங்கை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இந்த திடீர் அரசியல் குழப்பத்தால், இலங்கை அரசியலில் உச்ச கட்ட நெருக்கடி நிலவுகிறது. இதற்கிடையில், இலங்கை பாராளுமன்றத்தை முடக்கிய அதிபர் சிறிசேனா, வரும் 14 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றம் 14 ஆம் தேதி என அதிபர் அறிவித்தற்கு எதிராக இலங்கையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் அதிபர் சிறிசேனாவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்து கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கை சபாநாயகர், அதிபருக்கு எழுதிய கடிதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி ராஜபக்ச நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை ராஜபக்சவை பிரதமராக ஏற்க முடியாது, அதுவரை  ரணில்தான் இலங்கையின் பிரதமர். நாடாளுமன்றத்தை 7 ஆம் தேதி கூட்டுவதாக அறிவித்து விட்டு தாமதிப்பது ஏன்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

இந்த சூழலில், நாடாளுமன்றத்தை கூட்டாமல் தாமதப்படுத்துவது, ஜனநாயகத்தை சவப்பெட்டியில் அடைப்பதற்கு சமம் என்று ரனில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனத்தை முன்வைத்துள்ள ரனில், “ இறையாண்மை அடியோடு அழிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்; ரனில் விக்ரமசிங்கே
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
2. இலங்கையில் சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கம்
இலங்கையில், நீர்கொழும்பும் பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து சமூக வலைதளங்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.
3. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு: அதிபர் மைத்ரிபால சிறிசேனா
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு அரசாங்கமே பொறுப்பு என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார்.
4. இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு நடைபெற்றிருப்பது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
5. இலங்கையில் ஓரிரு நாளில் அமைதி திரும்பும்: இலங்கை ராணுவ அமைச்சர்
இலங்கையில் ஓரிரு நாளில் அமைதி திரும்பும் என்று இலங்கை ராணுவ அமைச்சர் ருவண் வாஜிவர்த்தனே தெரிவித்து உள்ளார்.