ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடி மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; 13 வீரர்கள் மரணம்


ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடி மீது தலீபான் தீவிரவாதிகள் தாக்குதல்; 13 வீரர்கள் மரணம்
x
தினத்தந்தி 5 Nov 2018 10:00 AM GMT (Updated: 5 Nov 2018 10:00 AM GMT)

ஆப்கானிஸ்தானின் சோதனை சாவடி ஒன்றில் தலீபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 வீரர்கள் மரணம் அடைந்தனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கே கஜினி பகுதியில் கோக்யானி என்ற இடத்தில் சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது.  இங்கு ராணுவம் மற்றும் போலீசார் கூட்டாக பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் இங்கு வந்த தலீபான் தீவிரவாதிகள் சிலர் சோதனை சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.  3 மணிநேரம் நடந்த இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இதில், 7 ராணுவ வீரர்கள் மற்றும் 6 போலீசார் என மொத்தம் 13 வீரர்கள் மரணம் அடைந்தனர்.

இதுபற்றி ஆளுநரின் செய்தி தொடர்பு நிர்வாகி ஆரிப் நூரி பேசும்பொழுது, தலீபான்களுக்கு விநியோகம் செய்வதற்கு பொருட்கள் கொண்டு செல்லப்படும் வழியை தடுக்கும் வகையில் கடந்த 2 நாட்களுக்கு முன் கூட்டாக சோதனை சாவடி அமைக்கப்பட்டது என கூறினார்.  இந்த தாக்குதலில் சோதனை சாவடி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது என அவர் கூறியுள்ளார்.

Next Story