வங்காளதேசத்தில் போர் குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனை விதிப்பு


வங்காளதேசத்தில் போர் குற்றம் நிரூபிக்கப்பட்ட 2 பேருக்கு மரண தண்டனை விதிப்பு
x
தினத்தந்தி 5 Nov 2018 1:08 PM GMT (Updated: 5 Nov 2018 1:08 PM GMT)

வங்காளதேசத்தில் போர் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆளும் அவாமி லீக் கட்சியின் முன்னாள் தலைவர் உள்பட 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டு நடந்த விடுதலை போரின்பொழுது, சிறுபான்மை இந்துக்களில் 100க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.  இந்த போரில் பாகிஸ்தானிய படைகளுக்கு நிதியுதவி அளித்து இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களை பற்றி வங்காளதேச அரசு விசாரணை தொடங்கியது.

இதில், வங்காளதேச விடுதலை போருக்கு எதிராக செயல்பட்ட அடிப்படைவாதிகளான ஜமாத் இ இஸ்லாமி அமைப்பினை சேர்ந்த 53 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்களில் 5 பேர் இயற்கை மரணம் அடைந்துள்ளனர்.  7 போர் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு விட்டனர்.

இந்த நிலையில், வங்காளதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அவாமி லீக்கின் முன்னாள் தலைவராக இருந்த லியாகத் அலி உள்ளிட்ட 2 பேருக்கு எதிராக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளன.  அவர்கள் தப்பியோடி விட்டனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட அவாமி லீக் கட்சியின் முன்னாள் தலைவர் உள்பட 2 பேரை சாகும்வரை தூக்கிலிடும்படி வங்காளதேச சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Next Story