ஈரான் சபஹார் துறைமுகப்பணிகள் : இந்தியாவுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா


ஈரான் சபஹார் துறைமுகப்பணிகள் : இந்தியாவுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா
x
தினத்தந்தி 7 Nov 2018 6:03 AM GMT (Updated: 7 Nov 2018 6:03 AM GMT)

ஈரானில் சபஹார் துறைமுகப்பணிகள் மேற்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அளித்துள்ளது.

வாஷிங்டன்,

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமல்படுத்தியுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த பொருளாதார தடை இதுவரை இல்லாத மிக கடுமையானது என்று கூறப்படுகிறது. இதுவரை இல்லாத மிகக் கடுமையான இந்தப் பொருளாதாரத் தடையால், அணு ஆயுதங்கள் தொடர்பான ஈரானின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஈரானில் சபஹார் துறைமுகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், ஆப்கனை இணைக்கும் ரயில்பாதை அமைக்கவும், இந்தியாவிற்கு சில அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, ”நீண்ட ஆலோசனைக்கு பிறகு, சபஹார் துறைமுகத்தின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், இங்கிருந்து ஆப்கனுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ரயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும், அமெரிக்கா சில அனுமதியை வழங்கி உள்ளது. ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்யவும் அனுமதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story