அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை இடைத்தேர்தல் : டொனால்ட் டிரம்புக்கு பின்னடைவு


அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபை இடைத்தேர்தல் : டொனால்ட் டிரம்புக்கு பின்னடைவு
x
தினத்தந்தி 7 Nov 2018 12:24 PM GMT (Updated: 7 Nov 2018 12:24 PM GMT)

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள்  சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ளது ஜனநாயக கட்சி ஆனால், அதே வேளையில் செனட் சபையில் தனது பலத்தை அதிகரிக்க குடியரசுக் கட்சி முயலும்.

அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது. நேற்று  நடந்த தேர்தல் வாக்கெடுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்முறைதான் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

குடியரசு கட்சியை சேர்ந்த ஒருவர் நாட்டின் அதிபராக இருக்கும்போது, பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிகம் நடந்திராத ஒன்றாகும்.

Next Story