உலக செய்திகள்

ஜிம்பாப்வே நாட்டில் பேருந்துகள் மோதல்: 47 பேர் பலியான பரிதாபம் + "||" + 47 dead as buses collide in Zimbabwe: Police

ஜிம்பாப்வே நாட்டில் பேருந்துகள் மோதல்: 47 பேர் பலியான பரிதாபம்

ஜிம்பாப்வே நாட்டில் பேருந்துகள் மோதல்: 47 பேர் பலியான பரிதாபம்
ஜிம்பாப்வே நாட்டில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 47 பேர் பலியாகினர்.
ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டின் தலைநகர் ஹராரேவில் இருந்து கிழக்கு நகரான ருசாபே நகரை இணைக்கும்  சாலையில், இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.  இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக  விபத்து நடைபெற்ற இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி பால் நியாதி, இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மோசமான சாலை பராமரிப்பு காரணமாக ஜிம்பாப்வே நாட்டில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவது வாடிக்கையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜாம்பியா செல்ல இருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 43 பேர் பலியாகினர். சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று போக்குவரத்து துறை துணை மந்திரி பார்சூன் சேசி தெரிவித்தார்.