உலக செய்திகள்

எச்-1பி விசாக்கள்: மிகவும் திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக விதிகள் மாற்ற டொனால்டு டிரம்ப் விருப்பம் + "||" + H-1B visas: Trump wants change in provisions to attract highly-skilled workers

எச்-1பி விசாக்கள்: மிகவும் திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக விதிகள் மாற்ற டொனால்டு டிரம்ப் விருப்பம்

எச்-1பி விசாக்கள்: மிகவும் திறமையான தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக விதிகள் மாற்ற டொனால்டு டிரம்ப் விருப்பம்
மிகவும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்ப்பதில் ஒரு சிறந்த பங்கை வகிக்க, தற்போது இருக்கும் எச்-1பி விதிகளில் மாற்றங்களை செய்ய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது என்று வெள்ளை மாளிகை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டின் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு வசதியாக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசாக்களை வழங்கி வருகிறது.

இந்த ‘எச்-1 பி’ விசாக்களுக்கு, இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் பெரும் வரவேற்பு உள்ளது. அதிலும் குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விசா கேட்டு விண்ணப்பங்கள் குவிவதும், குலுக்கல் நடத்தி விசா வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. 

இப்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வரவேற்பைப் பெற்றுள்ள ‘எச்-1 பி’ விசாக்களால் அமெரிக்காவில், உள்நாட்டினரின் வேலை வாய்ப்பு பாதிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த ‘எச்-1 பி’ விசாக்களில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து, பிற நாட்டினர் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு இது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கலானது. கடும் எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை.

இந்த நிலையில்  தொழில் நுட்பத்தைப் போன்ற மிகவும் திறமையான தொழில்நுட்ப தொழிலாளர்கள்  நாட்டில் தங்குவதை உறுதிப்படுத்த வழிகளை கண்டுபிடிக்க அதிபர் விரும்புகிறார். அவர் இந்த முழு குடியேற்றத்தின் ஒரு மிகவும் சாதகமான பகுதியாக காண விரும்புகிறார் என வெள்ளை மாளிகை கொள்கை ஒருங்கிணைப்புக்கான பணியாளர்கள் துணைத் தலைவர் கிறிஸ் லிடெல்  கூறினார்.

புதிய தொழில்நுட்பத்தில் வாஷிங்டன் போஸ்ட்டின் நேரடி விவாதத்தின்போது, எச் 1 பி விசா மீதான அதிபரின்  எண்ணங்கள் பற்றி கேட்டபோது, லிடெல் இவ்வாறு கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி - சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.
2. இத்தாலியின் ‘டயட் பீட்சா’
சமீபத்தில்தான் இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்
3. யார் பயங்கரவாதி? அமெரிக்கா-ஈரான் வரலாறு காணாத மோதல்
அமெரிக்கா-ஈரான் இடையே வரலாறு காணாத மோதல் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத பரவலால் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த ஈரானுடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்தின.
4. ஜமால் கசோக்கி கொலை: சவுதியை சேர்ந்த 16 பேருக்கு அமெரிக்கா தடை
பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடையவர்கள் எனக்கூறி சவுதியை சேர்ந்த 16 பேர், நாட்டுக்குள் வர அமெரிக்கா தடை விதித்துள்ளது.
5. உலகிலேயே தாயகத்திற்கு பணம் அனுப்புவோர் பட்டியலில் இந்தியா முதலிடம்
வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் கடந்த ஆண்டில் 79 பில்லியன் டாலர்கள் தொகையை தாயகத்திற்கு அனுப்பியுள்ளனர்.