பெரிய நீரூற்று போன்ற புதிய கருந்துளை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


பெரிய நீரூற்று போன்ற புதிய கருந்துளை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 11:30 AM GMT (Updated: 9 Nov 2018 11:30 AM GMT)

பெரிய நீரூற்று போன்ற புதிய கருந்துளை ஒன்றினை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

பெரிய நீரூற்று போன்ற புதிய கருந்துளை ஒன்றினை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இது  பூமியில் இருந்து ஏறத்தாழ ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அபெல் 2597 எனப்படும் தொகுப்பில் காணப்படுகின்றது. 

இது ராட்சத நீரூற்று பெருக்கெடுப்பது போன்று காட்சி அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதனை இயந்திரவியல் நீர் பம்பில் இருந்து  நீர் வெளியேறுவதற்கும் ஒப்பிட்டுள்ளனர். மேலும் இக் கருந்துளையில் குளிர்ந்த நிலையில் வாயுக்கள் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.


Next Story