உலக செய்திகள்

உலகைச் சுற்றி + "||" + Around the world

உலகைச் சுற்றி

உலகைச் சுற்றி
தென்கொரியாவில் நிதி மந்திரியை அதிரடியாக பதவி நீக்கம் செய்து அதிபர் மூன் ஜே இன் உத்தரவிட்டார்.

* ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போர்ன் நகரின் மக்கள் நெரிசல் மிகுந்த வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் ஒருவர் 3 பேரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அவர் போலீசாரை நோக்கி பாய்ந்தபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படு கிறது.

* தென்கொரியாவில் நிதி மந்திரி கிம் டாங் யியானை அதிரடியாக பதவி நீக்கம் செய்து அதிபர் மூன் ஜே இன் உத்தரவிட்டார். இதே போன்று அதிபரின் கொள்கை வகுக்கும் குழுவின் தலைவர் ஜாங் ஹா சங்கும் நீக்கப்பட்டுள்ளார். நாட்டின் பொருளாதார மந்த நிலையை போக்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் திறம்பட செயல்படாததே பதவி நீக்கத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

* பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா 2004-ம் ஆண்டு தொடங்கி இதுவரை 409 ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி உள்ளது. இதில் 2 ஆயிரத்து 714 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

* தென்கொரியாவும், பாகிஸ்தானும் பொருளாதார ரீதியிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என ஒப்புக்கொண்டுள்ளன.

* அமெரிக்காவில் மிகத் திறமை வாய்ந்த வெளிநாட்டினருக்கு மட்டும் ‘எச்-1பி’ விசா வழங்க வகை செய்யும் விதத்தில், முக்கிய மாற்றங்களை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.