உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பின் காவலை நீட்டித்து லாகூர் ஊழல் தடுப்பு கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
* உலக பொருளாதாரத்துக்கு அமெரிக்க, சீன வர்த்தகம் மிக முக்கியமானது, டிரம்ப் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம் என்று சீன உயர் அதிகாரி யாங் ஜீச்சி தெரிவித்து இருக்கிறார்.


* ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த கூட்டத்தில் தலீபான் கள் வலியுறுத்தியதாக தகவல் கள் வெளியாகி உள்ளன.

* ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப்பின் காவலை வரும் 24-ந் தேதி வரை நீட்டித்து லாகூர் ஊழல் தடுப்பு கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

* வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிட அந்த நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் மஷ்ரப் மோர்டாஸாவும், ஷகீப் அல் ஹசனும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது - ஐகோர்ட்டு உத்தரவு
ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.