உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 11 Nov 2018 10:30 PM GMT (Updated: 11 Nov 2018 7:00 PM GMT)

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பதற்கு, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.


* இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பதற்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். ஜனநாயக செயல்முறைகளை மதிப்பதற்கும், கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கும்தான் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

* சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் உள்ள டெயிர் அல் ஜோர் மாகாண பகுதிகளில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதல்களில் 41 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் 17 பேர் ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகள் என்பதுதான் நெஞ்சை நொறுக்கும் தகவல் ஆகும்.

* சோமாலியா நாட்டின் தலைநகரான மொகாதிசு நகர நட்சத்திர ஓட்டலையொட்டி நடந்த குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இப்போது பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

* பாகிஸ்தானில் தலீபான்களின் மதிப்புக்குரியவராக திகழ்ந்து வந்த மத குரு மவுலானா சமியுல் ஹக் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கத்திக்குத்து நடத்தி ஒருவரை கொன்றதுடன், 2 பேரை படுகாயம் அடையச்செய்தவரை. போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது பெயர் ஹசன் காலிப் சிரே அலி; ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் கவரப்பட்டு, அவர் இந்த சம்பவத்தை நடத்தி உள்ளார் என தெரிய வந்துள்ளது.



Next Story