உலக செய்திகள்

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு + "||" + Ebola virus in Congo killed 200 people

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்கி 200 பேர் சாவு
காங்கோ நாட்டில், எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 200 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
கின்ஷசா,

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளது. அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நோய் தாக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடக்கு கிவு பிராந்தியத்தில் உள்ள பேனி நகரை சேர்ந்தவர்கள், அங்கு 8 லட்சம் பேர் வசித்து வருகிறார்கள் என அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இப்படி அங்கு எபோலா வைரஸ் தாக்கி வருகிற நிலையில், சிகிச்சை அளிக்கிற மருத்துவ குழுவினருக்கு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக அந்த நாட்டின் சுகாதார துறை மந்திரி ஒளி இலுங்கா கூறினார்.

காங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்தார்.தொடர்புடைய செய்திகள்

1. ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் மீது தாக்குதல் விசைப்படகு சேதம்
ராமநாதபுரம் கடல் பகுதியில் குளச்சல் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அவர்களது படகு சேதமானது.
2. வில்லியனூர் அருகே, வீடு புகுந்து தொழிலாளி மீது தாக்குதல்
வில்லியனூர் அருகே தொழிலாளி வீடு புகுந்து தாக்கப்பட்டார். அது தொடர்பாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி செல்வாக்கு உயர்வு
பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்: விமானப்படைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு
பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்தது.
5. விமான தாக்குதலில் சந்தேகம் உள்ளோர் பாகிஸ்தான் சென்று உடல்களின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.
இந்திய விமான படை தாக்குதல் பற்றி சான்றுகள் கேட்போர் பாகிஸ்தான் சென்று உடல்களின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள் என தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.