சீன ராணுவத்தில் சேர்க்கபட்ட ஜெ-20 உளவு விமானம் இந்தியா கவலைப்பட வேண்டுமா?


சீன ராணுவத்தில் சேர்க்கபட்ட ஜெ-20 உளவு விமானம் இந்தியா கவலைப்பட வேண்டுமா?
x
தினத்தந்தி 13 Nov 2018 6:23 AM GMT (Updated: 13 Nov 2018 6:23 AM GMT)

சீன ராணுவத்தில் அப் கிரேடு செய்யப்பட்ட செங்டு ஜெ-2 சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையில் சேர்க்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க எப்-22 மற்றும் எப்-35 யை விட சீனாவின் அப் கிரேடு செய்யப்பட்ட செங்டு ஜெ-20 சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ விமானப்படையில்  சேர்க்கப்பட்டு உள்ளது. ஜெ-20  ஒற்றை இருக்கையுடன் கூடிய  மற்றும் இரட்டை இயந்திரங்களை கொண்டது.

சுஹாய் விமான நிகழ்ச்சியில்  ஏவுகணைகளுடன் கூடிய செங்டு ஜெ-20 காட்சிபடுத்தப்பட்டது. 

கடந்த ஆண்டு, செயல்திட்ட  மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தில் சீனா  வெளியிட்ட ஒரு அறிக்கையில்,செங்டு ஜெ-20 அமெரிக்க விமானப் படையில் உள்ள போர்விமானங்களுக்கு  ஒரு சவாலை அளிக்ககூடும் என கூறி இருந்தது.

சீன பாதுகாப்பு வல்லுநர்கள் ஜெ-20  பிராந்தியத்தில் உள்ள மற்ற விமானப் படைகளுக்கு  மீது ஒரு சவாலாக  இருக்கும்  என்று இந்திய மற்றும் ஜப்பானிய விமானப்படைகளை மறைமுகமாக குறிப்பிடுகிறார்கள்.

சீன இராணுவ நிபுணர், சாங் ஜாங்பிங் கூறும்போது, எதிர்காலத்தில் சீனாவின் வான் வழியில்  நுழைய தைரியம் வராது எனகூறி உள்ளார்.

ஜெ-20 என்பது ரகசிய விமானம்  எதிரியின் விமானங்களை  கண்டறிவதற்கு இது உதவுகிறது.

இந்த ஆண்டு மே மாதம் வெளியான ஒரு அறிக்கையில், செங்டு ஜெ 20 உளவு  தொழில்நுட்பத்தை உபயோகித்த போதிலும்  இந்திய  சுகோய் சு -30 எம்கேஐ அதனை இடைமறிக்கும் ஆற்றல் கொண்டது என கூறப்பட்டு உள்ளது.

விமானத் தலைவர் மார்ஷல் பிரேந்தர் சிங் தானா கூறும்போது, திபெத் மீது பறக்கும்போது சுகு -30 எம்கேஐ ரேடார் செங்டு ஜெ-20 விமானத்தை கண்டறிந்து  கண்காணித்தது என கூறினார்.

Next Story