காந்தக்குரலில் பாடிய அபூர்வ கழுதை


காந்தக்குரலில் பாடிய அபூர்வ கழுதை
x
தினத்தந்தி 13 Nov 2018 8:01 AM GMT (Updated: 13 Nov 2018 8:01 AM GMT)

காந்தக்குரலில் பாட கழுதை ஒன்று அசத்தி உள்ளது.

சிலர் கர்ண கொடூரமாக பாடினால் அவரை கழுதையுடன் ஒப்பிடுவார்கள்.  ஆனால் கழுதை ஒன்றே இனிமையாக பாடினால்... அயர்லாந்தில் கழுதையொன்று காந்தக்குரலில் பாடிய சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அயர்லாந்தில் வசிக்கும் மார்ட்டின் ஸ்டான்டன் என்பவர் தமது வீட்டு அருகில் இருக்கும் கழுதை ஒன்று அழகிய குரலில் பாடியதைக் கேட்டு இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார். இதனால் அதன் குரலைப் பதிவு செய்து அந்தக் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர அது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஒரு சில ஆண்டுகளாகவே கழுதையை கவனித்து வந்த மார்ட்டின் அதற்குக் கொடுப்பதற்காக ஏதாவது உணவுப் பொருளை எடுத்து செல்லும் போது தொலைவிலேயே அதை கவனித்துவிடும் கழுதை, தனக்கு விருந்து கிடைக்கப் போவதை உணர்ந்து உற்சாகத்தில் குரல் எழுப்புமாம்.

ஒபேரா  பாடகியின் குரலைப் போல் இருப்பதை உணர்ந்த மார்ட்டின் கழுதைக்குப் பிடித்தமான தின்பண்டத்தைக் கையிலெடுத்துச் சென்று வெற்றிகரமாக அதன் கானத்தைப் பதிவு செய்தார். தற்போது அதுகுறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.


Next Story